'லியோ’ படத்தின் பிளாஷ்பேக் காட்சி பொய்யாகக் கூட இருக்கலாம் என லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் சொல்லியிருந்தது ரசிகர்கள் மத்தியில் கேலிப் பொருளாக, அதற்கு படக்குழு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், படம் வெளியான பிறகு லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், “படத்தில் மன்சூர் அலிகான் சொன்ன பிளாஷ்பேக் அவர் பார்த்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கும். அதன்படி அவர் கூறியுள்ளார். அந்த வசனம் கதையின் போக்கை மாற்றிவிடும் என நினைத்ததால் அதை எடிட் செய்துவிட்டோம். இன்னும் ‘லியோ’ தனது கதையைக் கூறவில்லை” எனச் சொல்லி இருந்தார்.
இதைத்தான் ரசிகர்கள் இணையத்தில் கேலி செய்து வந்தனர். அப்போது, ‘லியோ’ படத்தின் பிளாஷ்பேக் பொய்யா எனக் கேட்டு வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் லோகேஷ் கனகராஜ் எடிட் செய்து தூக்கி விட்டதாகச் சொன்ன மன்சூர் அலிகானின் அந்த வசனத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். 'நீங்கள் கேட்ட வீடியோ இதுதான். பர்ஸ்பெக்டிவ் ஃபுட்டேஜ் சரியாக இருக்கா?’ எனவும் கேப்ஷன் கொடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!
அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!
பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ
டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!