எனது படத்தைத் தோல்வி அடையச் செய்ய தேச விரோதிகள் சதி... கங்கனா குற்றச்சாட்டால் பரபரப்பு!

By காமதேனு

தனது திரைப்படம் தோல்வி அடைய வேண்டும் என தேச விரோதிகள் சதி செய்வதாக நடிகை கங்கனா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி வெளியானத் திரைப்படம் ‘தேஜஸ்’. சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் இந்தப் படத்தில் கங்கனா விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். அன்சுல் சவுகான், ஆசிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது.

கங்கனா ரனாவத்

இந்த படத்திற்கு கூட்டம் இல்லாததால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் நான்கு கோடி ரூபாய் வசூலைக் கூட எட்டவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து கங்கனா ரனாவத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனது படத்தை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ன தேச விரோதிகள் சதி செய்கிறார்கள்” என குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கங்கனா ரனாவத்...

இதற்கு முன்பு கங்கனா நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி2’, ’தாக்கட்’ ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. அடுத்து அவரது நடிப்பில் ‘எமர்ஜென்சி’ படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!

அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!

பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ

டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குட்நியூஸ்... இன்று முதல் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE