நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருக்கும்படியான புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ’இந்த ஜோடி புதுசா இருக்கே’ என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
சமீப காலத்தில் நடிகர் கமல்ஹாசனின் சினிமா பயணத்தில் ‘விக்ரம்’ மறக்க முடியாத படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாவும் இந்தப் படம் வெற்றியை வாரிக் குவித்தது. கமல்ஹாசனுக்கு இந்தப் படம் புது உற்சாகத்தையும் கொடுத்தது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இதற்கடுத்து லோகேஷ் நடிகர் விஜயை வைத்து இயக்கிய ‘லியோ’ படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியது.
இதற்கடுத்து ரஜினியின் 171வது படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜூக்கு கிடைத்தது. இதற்கானப் பணிகள் நடந்து வரக்கூடிய நிலையில், வருகிற ஏப்ரல் மாதத்தில் இதன் படப்பிடிப்புத் துவங்க இருக்கிறது.
’விக்ரம்’ படம் கொடுத்த வெற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு லோகேஷ் கனகராஜ் மீது தனி வாஞ்சையையே உருவாக்கியது என்பது அவரின் பேச்சில் தெரிந்ததாகப் பல ரசிகர்கள் சொல்லி வந்தனர். இப்படியான சூழ்நிலையில்தான், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் புதிய புராஜெக்ட் ஒன்றில் இணைந்திருக்கின்றனர். இந்த அறிவிப்பு புதிய போஸ்டர் ஒன்றோடு வெளியாகி இருக்கிறது. லோகேஷ் மற்றும் ஸ்ருதி இருவரும் ஒருவரை ஒருவர் சீரியஸாகப் பார்த்தபடி நிற்கின்றனர்.
’Inimel Delulu is the New Solulu’ என்ற கேப்ஷனும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. ஸ்ருதியின் இசை ஆல்பம் எதையும் லோகேஷ் இயக்கியுள்ளாரா அல்லது ‘எல்சியு’வின் ஷார்ட் பிலிமா என ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து தயாரிப்புத் தரப்பு இன்னும் தெளிவுப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!
பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!
கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!
அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!