லட்சுமி மேனன், யோகிபாபு இணைந்திருக்கும் புதிய படம் ‘மலை’ - அடுத்த மாதம் வெளியாகிறது!

By கவிதா குமார்

சென்னை: நடிகர்கள் லட்சுமிமேனன் - யோகிபாபு இணைந்திருக்கும் புதிய படமான ‘மலை’ அடுத்தமாதம் வெளியாகிறது.

நடிகர்கள் யோகிபாபு, லக்‌ஷ்மி மேனன், காளி வெங்கட் மற்றும் குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி
நடித்திருக்கும் 'மலை’ திரைப்படம் செப்டம்பரில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் முருகேஷ் படத்தை இயக்கியிருக்கிறார்.

மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது , மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும் இந்த பூமியில் முக்கியமானதாக இருக்கிறது. மனிதன் தன் சுயநலத்திற்காக இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பிக்கிறான். இதிலிருந்து தப்பிக்க அதிகாரம், அரசியல், மதம், சாதி , இனம் என்று இதற்கு பின்னால் நின்றுகொண்டு, சக மனிதர்கள் மீது அன்பை மறந்து எதிர்கால சந்ததியினரின் வாழ்வு குறித்து கவலைப்படாமல் இருக்கிறார்கள். மனிதர்களின் பேராசை இயற்கையை மொத்தமாக இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

மனிதனின் சுயநல கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன என்பது பற்றிய கதைதான் ‘மலை’. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் மாதம் வெளியாகும் இத்திரைப்படத்தின் பாடல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE