விஜயின் தவெக கொடியில் இருப்பது வாகை மலர் இல்லையா? - வெளியான அதிர்ச்சி தகவல்

By KU BUREAU

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் இருப்பது வாகை மலரே அல்ல என்ற செய்தி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

தவெக தலைவர் விஜய் இன்று தனது கட்சிக் கொடியை பனையூரில் அறிமுகம் செய்து வைத்தார். கொடியின் நடுவில் வாகை மலரும் அதைச் சுற்றி நட்சத்திரங்களும் வாகை மலர் பக்கவாட்டில் பிளிறும் இரு போர் யானைகளும் அமைந்திருக்கும்படி கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொடியின் நடுவில் இருக்கும் யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியினுடையது எனவும், அப்படியிருக்க அதை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படி பயன்படுத்துவது தவறு என்ற ஆட்சேபனையையும் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இணையத்திலும் இந்த யானை சின்னம் ஃபெவிகால் பிராண்டின் சின்னம் எனவும், ஸ்பெயின் நாட்டு கொடி என்றும் பல மீம்ஸ்ஸூம் வரத் தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், வெற்றியை குறிக்கும் சின்னமாக அமைந்திருக்கும் இந்த வாகை மலர், வாகை மலரே அல்ல என்ற புது சர்ச்சை இணையத்தில் கிளம்பி இருக்கிறது. அதாவது வாகை மலர் வெளிர் நிறத்தில் இருக்கும். ஆனால், விஜய் கட்சி கொடியில் உள்ள மலரோ பிங்க் நிறத்தில் உள்ளது. இந்த் பிங்க் நிற மலர் பண்ணி வாகை எனப்படும் தூங்குமூஞ்சி மரத்தின் மலர் என்பதுதான் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE