தவெக தலைவர் விஜய் கட்சியின் கொடி அறிமுக விழாவில் அவரது பெற்றோர் சந்திரசேகர்- ஷோபா இருவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் அம்மா ஷோபா, விஜயை கூப்பிட அவர் திரும்பி பார்க்காமல் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் கொடி அறிமுக விழா இன்று காலை பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விஜயின் பெற்றோர் உட்பட 250க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். வாகை மலர், பிளிறும் யானை நடுவில் இடம்பெற்றிருக்க சிவப்பு-மஞ்சள் நிறத்திலான கட்சிக் கொடியை விஜய் அறிமுகம் செய்தார். கட்சியின் உறுதி மொழியையும் வாசித்தார். பின்னர், இது கட்சிக்கான கொடி அல்ல எனவும் தமிழகத்தின் நாளைய தலைமுறைக்கான வெற்றிக் கொடி எனவும் பேசினார். கொடியின் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாற்றை கட்சியின் முதல் மாநில மாநாட்டில் தெரிவிப்பேன் என்றும் கூறினார்.
பின்னார், இந்த நிகழ்வுக்கு தனது பெற்றோர் வந்தது தனக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது என்றும் கூறினார். நிகழ்வு முடிந்து விஜய் எல்லோருக்கும் நன்றி தெரிவித்து செல்லும்போது ஷோபா, விஜயை கூப்பிடுகிறார். ஆனால், அவரைத் திரும்பி பார்க்காமல் விஜய் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. விழா நடக்கும்போது பெற்றோரைப் பாராட்டி பேசிய விஜய், விழா முடிந்ததும் பெற்றோரை கண்டு கொள்ளவில்லையா என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், கூட்டமிகுதியிலும் அவசரத்திலும் ஷோபா கூப்பிட்டதை விஜய் கவனிக்காமல் விட்டிருப்பார் என விஜய்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
» ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய் பேச்சு!
» சிவப்பு, மஞ்சள், யானைகள், வாகை மலர் - தவெக கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய்!
SHAME ON YOU VIJAY