நெட்பிளிக்ஸில் ‘மகாராஜா’ சாதனை

By KU BUREAU

விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா, நட்டி என்ற நட்ராஜ் சுப்பிரமணியம், அருள்தாஸ், சிங்கம்புலி உட்பட பலர் நடித்த படம் ‘மகாராஜா’. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்தப் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்திருந்தார்.

விஜய் சேதுபதியின் 50-வது படமான இது கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களைத் தந்தை பழிவாங்கும் கதைதான் என்றாலும் இந்தப் படத்தின் திரைக்கதை எல்லோராலும் பாராட்டப்பட்டது. தெலுங்கிலும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியானது.

அதில், இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் அதிக பார்வைகளைப் பெற்ற படமாக மகாராஜா முதலிடம் பிடித்துள்ளது. மகாராஜா படத்துக்கு 18.6 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ‘க்ரூ’ என்ற இந்தி படம் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE