‘தங்கலான்’ பட சர்ச்சை: இயக்குநர் இரஞ்சித் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

By KU BUREAU

சென்னை: ’தங்கலான்’ படத்தில் வைணவ மதம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் இரஞ்சித் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த வாரம் ‘தங்கலான்’ படம் வெளியானது. இதில் வைணவ மதம் தொடர்பான சில காட்சிகளை இரஞ்சித் வைத்திருப்பார். இது அந்த மதத்தை இழிவுப்படுத்துவதாக பெண் வழக்கறிஞர் பொற்கொடி இரஞ்சித் மீது புகார் கொடுத்துள்ளார்.

பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ‘புத்த மதத்தை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காகவே வைணவ மதத்தை இழிவுபடுத்தும்படியான காட்சிகளை இரஞ்சித் அமைத்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லை எனில், படத்தைத் தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். இது தொடர்பாக இரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE