நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

By காமதேனு

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழக அரசியல் கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரஜினி-விஜய்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அவரது இந்த அரசியல் நகர்வுக்கு பல பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

நடிகர் விஜய் என்னதான் சினிமா பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும் அவருக்கு சினிமாவில் ஆதர்ச நாயகன் எப்போதும் ரஜினிதான். சிறுபிள்ளையில் இருந்து அவரைப் பார்த்து வளர்ந்த விஜய், பின்னாளில் ரஜினியைப் போலவே திரையில் நடிகனாக வேண்டும் என்ற ஆசையை வளர்த்தார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகனாக மாறிய போது அதற்கான பாதையை அவரது தந்தை சந்திரசேகர் அமைத்துக் கொடுத்தார். கமர்ஷியல் நாயகனாக வெற்றிகளை வாரிக் குவித்த விஜய், தன்னுடைய ஆதர்ச நாயகனுக்கே போட்டியாக வளர்ந்து நிற்பார் என்பது அப்போது யாரும் எதிர்பாராத விஷயம்.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் எனும் அளவுக்கு பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் சக்ரவர்த்தியாக இருக்கிறார் விஜய். ரஜினி வழியில் சினிமாவுக்கு வந்த விஜய் அவரைப் போலவே அரசியல் ஆசையையும் சேர்த்தே வளர்த்தார். அந்த ஆசையை வெளிப்படுத்தவும் செய்தார்.

ஆனால், ரஜினி போலவே அரசியலுக்கு ஆசைப்பட்டு வராமல் போய்விடுவாரோ என்ற எண்ணம் பலருக்கும் முன்பு இல்லாமல் இல்லை. இப்படியான சூழலில் தான் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் அறிவித்தார்.

இதுகுறித்து, சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு அவர், ”விஜய்க்கு வாழ்த்துகள்!” என புன்னகையோடு கூறியுள்ளார். ரஜினி தற்போது ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE