‘தமிழ்நாடு இனி சிறக்கும்’ - கொடி அறிமுகம் பற்றி நடிகர் விஜய் அறிக்கை!

By KU BUREAU

சென்னை: தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை நடிகர் விஜய் நாளை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், அதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வரும் விஜய், நாளை தனது கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்ய உள்ளார். என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே என ஆரம்பிக்கும் அந்த அறிக்கையில், ‘சரித்திரத்தின் புதிய திசையாகவும் விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம்.

அப்படியான வரமாக இறைவனும், இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் நம் வீரக் கொடியை வெற்றிக் கொடியை நாளை நம் தலைமையின் நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்தி கழக கொடிப் பாடலை வெளியிட்டு கழக கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE