மலையாள சினிமாவில் பாலியல் சுரண்டல்: ஹேமா கமிட்டி அடிப்படையில் நடவடிக்கை?

By KU BUREAU

பிரபல மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இதில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மலையாள சினிமாவில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக பாலியல் தொல்லை மற்றும் பாலின சமத்துவமின்மை தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி தனது அறிக்கையை 2019-ம்ஆண்டு அரசிடம் சமர்ப்பித்தது. பல்வேறு காரணங்களால் அரசு அதை வெளியிடாமல் இருந்தது. 5 வருடங்களுக்குப் பிறகு அந்த கமிட்டியின் 233 பக்க அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அந்த அறிக்கையில், “மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் வழக்கம் உள்ளது. நடிகைகள் ஓட்டல் அறைகளில் தனியாக இருக்கப் பயப்படுவார்கள். தங்கள் அறைகளில் தூங்கிக் கொண்டிருக்கும்போது நடிகர்கள் கதவைத் தட்டுவார்கள். இதனால் பலநடிகைகள் பெற்றோருடன் படப்பிடிப்புக்கு வருகின்றனர்.

பாலியல் ரீதியாக ஒத்துழைக்கும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மறுக்கும் நடிகைகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுகின்றன. பாலியல் ரீதியாக மிரட்டும் நடிகர்களின் பட்டியலில், முன்னணிநடிகர்களே அதிகம் இருக்கின்றனர். மலையாள சினிமா ஒரு கிரிமினல் கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் அடங்கிய ‘அதிகார கூட்டணி’ இருக்கிறது” என்பது உட்பட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கையின் அடிப்படையில் எந்தவொருவழக்கும் பதிவு செய்ய முடியாது என்று போலீஸார்தெரிவித்துள்ளனர். ஆனால், ஹேமா கமிட்டிஅறிக்கையில் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சரும், நடிகருமான கே.பி.கணேஷ் குமார் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE