பேபி ஜானாக மாறிய விஜயின் ‘தெறி’ ரீமேக்... சூப்பர் அப்டேட்!

By காமதேனு

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது. இந்தப் படத்திற்கு ‘பேபி ஜான்’ எனப் பெயரிட்டுள்ளனர். படம் எப்போது வெளியாகும் என்ற அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான வெற்றிப் பெற்ற படம் ‘தெறி’. இந்தப் படம் வெளியாகி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பாலிவுட்டில் ரீமேக்காகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் அட்லி தயாரிக்கிறார். வருண் தவான் கதாநாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இதற்கான பூஜை நடந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாகத் தொடங்கியது. தலைப்பிடப்படாமல் தற்காலிகமாக ‘விடி18’ என அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

'பேபி ஜான்’ என அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம் மே 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்தை காளீஸ் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். பாலிவுட்டுக்கு ஏற்றாற் போல, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இருக்கும் என்பது இந்த டைட்டில் கிளிம்ப்ஸிலியே தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE