நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர் மேற்கு வெல்கம் காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரபல நடிகை ஜெயலட்சுமி. தமிழ் சினிமாவில் 'வேட்டைக்காரன்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஜெயலட்சுமி சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் தற்போது பாஜகவில் மகளிர் அணியில் மாநிலத் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையருக்கு நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், நேற்று மதியம் 70 7 7 26 1 4 6 4 என்ற செல்போனில் இருந்து தனக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், எதிர் முனையில் பேசிய அடையாளம் தெரியாத நபர் தன்னை தரக்குறைவாக பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னையும் தனது கட்சித் தலைவர் பற்றியும் மிக அநாகரீக முறையில் பேசி என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏழை மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பல சமூக செயல்பாடுகளைச் செய்து வருகிறேன். எனவே, என்னை செல்போனில் ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் பேரில் திருமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
'இந்திய இசைக்குழுவினருக்கு ‘கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!
அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!
ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!
நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்... அரசியலில் பரபரப்பு!
ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!