அரசியல் களத்திற்கு நடிகர் விஜய் முழுநேரமாக வர இருக்கிறார். இதனால், தமிழ் சினிமாவை விட்டு அவர் முழுமையாக விலக இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த முடிவால் சினிமாவுக்கு கோடிகளில் நஷ்டம் எனப் புலம்புகின்றனர் ரசிகர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என அரசியல் கட்சியை அறிவித்தார். சாதி, மத சார்பற்ற மற்றும் ஊழலற்ற ஆட்சி குறிக்கோள் என்பதையும் கூறியிருந்தார். மேலும், வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலேயே களமிறங்கப் போவதாகவும் கூறினார்.
அரசியலில் முழுநேரமாக களமிறங்கப் போவதால், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் நடிகர் விஜய். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து, ’தளபதி 69’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய்.
இந்த இரண்டு படங்களை முடித்துக் கொடுத்தப் பின்பு இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவில் நடிகர் விஜய் தெளிவாக இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் நடிகர் விஜய்க்கு நல்ல மார்கெட் உண்டு.
படம் விமர்சன ரீதியாக சுமாராக இருந்தாலும், பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் விஜய் கில்லியாகவே இருக்கிறார். குறிப்பாக, இப்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரக்கூடிய இவரது படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. ’வாரிசு’ படம் ரூ. 310 கோடி, ‘லியோ’ படம் ரூ. 620 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படி பாக்ஸ் ஆஃபீஸ் சக்ரவர்த்தியாக வலம் வரும் விஜய் மொத்தமாக சினிமாவை விட்டு விலகுவதால் சினிமாவுக்கு பெரும் நஷ்டம் என்றுதான் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
'இந்திய இசைக்குழுவினருக்கு ‘கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!
அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!
ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!
நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்... அரசியலில் பரபரப்பு!
ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!