ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த பெண் யூடியூபர் மீது சிபிஐ அதிரடி!

By காமதேனு

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதற்காக தான் நடத்திய விசாரணைக்கு ஆதரவாக பிரதமர் கடிதம் அளித்ததாக பிரபல பெண் யூடியூபர் ஒருவர் பகீர் கிளப்பி இருக்கிறார். பிரதமர் பெயரில் போலி ஆவணம் தயாரித்த அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தைப் பெற்ற இவர், பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் நடிகை ஸ்ரீதேவி இறந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அப்போது பல சர்ச்சைகள் எழுந்தது. எனினும் அதுகுறித்து போனி கபூர் குடும்பம் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்தது. ஆனால், கடந்த வருடம் முதல் முறையாக ஸ்ரீதேவி மரணம் குறித்து ஊடகம் ஒன்றில் பேசியிருந்தார் அவரது கணவர் போனிகபூர்.

“ஸ்ரீதேவியின் மரணம் எதிர்பாராதது. அவர் எப்போதுமே தான் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதற்காக, குறைந்த கலோரி உணவை எடுத்து உடல் எடையை இளைத்துக் காட்டும் கிராஷ் டயட்டை அவர் பின்பற்றினார். இதனால், அவர் பலமுறை மயக்கம் அடைந்திருக்கிறார். இதுவே அவருக்கு எமனாக மாறியது” என்று சொன்னார் போனி கபூர்.

இந்த நிலையில், ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இரு நாட்டு அரசுகளும் உண்மையை மறைப்பதாகவும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த பிரபல யூடியூபரான தீப்தி பின்னிட்டி தீடீரென ஒரு தகவலை பரப்பினார். இதுகுறித்து தான் விசாரணை நடத்தியதாகவும் தனது கருத்துக்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அது தொடர்பான போலி ஆவணங்கள் சிலவற்றையும் சமர்ப்பித்தார்.

இதுதான் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் பெயரில் போலி ஆவணம் என மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் சாந்தினி ஷா புகார் தெரிவித்தார். இதனடிப்படையில் பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரைப்படி கடந்த ஆண்டு பின்னிட்டி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த நிலையில், பிரதமர் அலுவலகம் சம்பந்தமான ஆவணங்கள் போலியானவை என உறுதி செய்த சிபிஐ, இது தொடர்பாக நேற்று தீப்தி பின்னிட்டி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதுகுறித்து பேசியிருக்கும் தீப்தி, ”என் வாக்குமூலத்தை பதிவு செய்யாமல் சிபிஐ என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பேன்” என்று சொல்லி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்... அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE