நடிகர் சிம்பு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்க இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் வலம் வருகிறது. இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தனது நாற்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் நடிகர் சிம்பு. அன்று ரசிகர்களை சந்தித்த அவரது தந்தை டி.ராஜேந்தர், இன்னும் பெரிதாக வெற்றியைக் கொடுத்துவிட்டு ரசிகர்களை சிம்பு சந்திப்பார் என்றும் கூறினார்.
மேலும், அவர் தனது 48-வது படத்திற்காகத் தன்னைத் தீவிரமாகத் தயார்படுத்தி வருகிறார் என்றும் படம் கைவிடப்படவில்லை, விரைவில் தொடங்கும் என்றும் டி.ராஜேந்தர் கூறினார். இதுபோன்ற சூழ்நிலையில்தான், நடிகர் சிம்பு விரைவில் இயக்கத்திற்குத் திரும்பப் போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, வரலாற்றுக் கதையாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 48-வது படத்தை முடித்தப் பின்பு அடுத்து வரும் தனது ஐம்பதாவது படத்தைத் தானே இயக்கி நடிக்கும் முடிவில் இருக்கிறாராம் சிம்பு. இதற்கானப் பணியை விரைவில் தொடங்குவார் எனவும் தெரிகிறது.
கடந்த 2004-ம் ஆண்டு ‘மன்மதன்’ படத்தின் மூலம் இயக்குநரானார் சிம்பு. அந்தப் படமும் அவருக்கு ஹிட்டாகி நல்ல பெயரை வாங்கித் தந்தது. அந்தப் படத்தின் கதையைத்தான் தற்போது இரண்டாவது பாகமாக அவர் எடுக்க இருக்கிறாராம். ஐம்பதாவது படத்தின் கதை என்பதால் அதை இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப் போகிறார் என்கின்றனர்.
விரைவில் சிம்பு தரப்பில் இது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். சிம்பு மீண்டும் இயக்கத்திற்குத் திரும்ப இருக்கப் போகிறார் என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
'இந்திய இசைக்குழுவினருக்கு ‘கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!
அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!
ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!
நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்... அரசியலில் பரபரப்பு!
ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!