பிரம்மாண்டம்... நாக சைதன்யா- ஷோபிதா திருமணம் எங்கே நடக்க இருக்கிறது தெரியுமா?

By KU BUREAU

நடிகர்கள் நாக சைதன்யா- ஷோபிதாவின் திருமணம் எங்கே நடக்கிறது என்பது குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகை சமந்தாவுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணத்தை நடிகை ஷோபிதாவுடன் அறிவித்தார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இந்த மாதம் எட்டாம் தேதி ஹைதராபாத்தில் நாகார்ஜுனா வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. ஒரு புறம் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலான நிலையில், சமந்தா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வருத்தத்துடன் பதிவு செய்து வந்தனர். ’மகிழ்ச்சி மற்றும் அமைதியின் மியூசியம் நான்’ என்ற வாசகத்துடன் நடுவிரல் காட்டியபடி சமந்தா சமூகவலைதளத்தில் பகிர்ந்த புகைப்படம் நாக சைதன்யா- ஷோபிதா ஜோடிக்கு பதிலடி எனவும் ரசிகர்கள் சொல்லி வந்தனர்.

இந்த நிலையில், நாக சைதன்யா- ஷோபிதாவின் திருமணம் எங்கே நடக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயதார்த்தம் எளிமையாக முடித்திருந்தாலும் திருமணத்தை பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடத்த இருக்கிறார்களாம். அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி இருக்கிறார்கள். திருமண தேதி எப்போது என்பது விரைவில் முடிவு செய்து அறிவிக்க இருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE