ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்த திருப்பமாக இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீஸார் பலரையும் விசாரித்து வருகின்றனர். திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக எனப் பல கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளியிடம் மோனிஷா பலமுறை தொலைபேசியில் பேசி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மோனிஷாவை அடுத்து இயக்குநர் நெல்சனிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது. இந்த விஷயம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
» திரைவிமர்சனம்: ‘கொட்டுக்காளி’
» மாரி செல்வராஜ் படங்கள் பயமுறுத்தும்: இயக்குநர் இரஞ்சித் பேச்சு!