மணி ரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இணையும் புதிய படத்தில் நடிகை குஷ்புவின் மகள் இணைந்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்2’ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணி ரத்னம் இயக்கும் படங்களில் பிஸியாக இருக்கிறார். இன்னொரு புறம் படங்கள் தயாரிப்பு, அரசியல், பிக் பாஸ், கதர் துணி பிசினஸ் என இவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல். இந்த நிலையில், ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து இயக்குநர் மணி ரத்னத்துடன் தன்னுடைய 234வது படத்திற்காக கமல்ஹாசன் இணைந்துள்ளார்.
இதன் அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகிருந்த நிலையில் படத்தின் புரமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பின்னி மில்லில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இந்த வீடியோ கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில்தான் நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவும் இணைந்துள்ளார்.
இது குறித்தானப் புகைப்படத்தை நடிகை குஷ்பு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘எங்கள் அனைவரின் பெருமை அனந்திதா. அவள் வளர்ந்து கமல்ஹாசன் சார், மணி ரத்னம் சார் போன்ற இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளுடன் நிற்பது பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா நடிப்பிற்காக வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்க, இளையமகள் அனந்திகா தயாரிப்பு, இயக்கம், தொழில்நுட்பப் பணிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இயக்குநர் மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் இணைந்துள்ள அனந்திதா கமல்- மணி ரத்னம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!