கங்குவாவுடன் மோதுகிறது ரஜினியின் வேட்டையன்

By KU BUREAU

நடிகர் ரஜினிகாந்த், த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அக். 10-ல் இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே தேதியில், சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படமும் வெளியாக இருக்கிறது.

ஒரே நாளில் 2 முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.‘கங்குவா’ படத்தைச் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE