சோகம்... புற்றுநோயால் காலமான நடிகை பூனம் பாண்டே!

By காமதேனு

நடிகை பூனம் பாண்டே கர்பப்பை வாய் புற்றுநோயால் காலமாகியுள்ளார். இந்த செய்தி அவரது அதிகாரபூர்வமான சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

நடிகை பூனம் பாண்டே

பாலிவுட் நடிகை, மாடல் பூனம் பாண்டே (32) கர்பப்பை வாய் புற்றுநோயால் காலமானார். இந்த விஷயம் அவரது சமூகவலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. பூனம் புற்றுநோய்க்கு பலியான சோகம் அவரது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதுகுறித்து பூனமின் சமூகவலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘இன்றைய காலைப் பொழுது நமக்கெல்லாம் கடினமான ஒன்றாக மாறி இருக்கிறது. நம் அன்பிற்குரிய பூனம் பாண்டே கர்பப்பை வாய் புற்றுநோயால் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவர் மிகவும் அன்பும் கருணையும் கொண்டவர்.

இந்த கடினமான சமயத்தில் அவரது தனிப்பட்ட வாழ்விற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பூனம் பாண்டே கடந்த 2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். கடந்த 2013-ம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான இவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கவே, தனியாக ஒரு இணையதளம் தொடங்கி அதில் தனது அரை நிர்வாணப் படங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.

கடந்த 2020-ல் சாம் பாம்பே எனும் தயாரிப்பாளரை திருமணம் செய்தார் பூனம். அவருடன் கோவாவுக்கு ஹனிமூன் போகும் போதே கணவர் தன்னை டார்ச்சர் செய்தார் என போலீஸில் புகார் கொடுத்தார். இதனால், இருவருக்கும் சண்டை வெடித்து பிரிந்து விட்டனர். இப்படி சர்ச்சைகளின் நாயகியாக வலம் வந்த பூனம் பாண்டே இறந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதையும் வாசிக்கலாமே...


நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை... சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனையால் பரபரப்பு!

'#தலைவர் விஜய்'... ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

கோடிகளைக் குவிக்கும் அயோத்தி ராமர்... 10 நாட்களில் 25,000,00 பக்தர்கள் தரிசனம்! 11 கோடி காணிக்கை!

பெரும் பதற்றம்... துணை ராணுவம் குவிப்பு... டெல்லியில் ஆர்ப்பாட்டம்... இரண்டு மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

மகளிர்க்கு இலவச பேருந்து பயணம்... எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கொளுத்தி போராட்டம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE