ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விருது விழாவில் ‘விடுதலை’ படத்தை பார்த்தவர்கள் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்புக் கொடுத்துள்ளனர். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘விடுதலை’. ‘துணைவன்’ என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதன் இரண்டாம் பாகமும் இந்த வருடம் வெளியாக இருக்கிறது. கடந்த வருடமே இரண்டாம் பாகத்திற்கானப் படப்பிடிப்பு முடிந்து, தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில்தான், நெதர்லாந்தில் நடைபெற்று வரக்கூடிய ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் ’விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாகங்களையும் பார்த்து முடித்தவுடன் இறுதியில் ஐந்து நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைத்தட்டி உள்ளனர். இது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த காணொலியும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
பால ராமரை தரிசிக்க அயோத்திக்கு 6 நாட்கள் பாதயாத்திரை... 350 இஸ்லாமியர்கள் பங்கேற்பு!
அமைதிக்கான நோபல் பரிசு... 4வது முறையாக டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரை!
அதிர்ச்சி... வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு!
உஷார்...அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இன்று முதல் சலுகைக் கட்டணத்தில் பயணம்...புதிய வசதியுடன் கிளாம்பாக்கம் பேருந்து முனையம்!