சீரியல் நடிகை சுபிக்ஷா தனது இரண்டாவது திருமணத்தை சமூகவலைதளத்தில் உறுதி செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
சின்னத்திரை நடிகையும் டான்சருமான சுபிக்ஷா, மானஸ் என்பவரை கடந்த 2020ல் திருமணம் செய்து கொண்டார். மானஸூம் பல சின்னதிரை தொடர்களில் நடித்து வந்தது மட்டுமல்லாது, நடனத்திலும் ஆர்வம் கொண்டவர். சுபிக்ஷாவை இவர் திருமணம் செய்வதற்கு முன்பு ’ராஜா ராணி’ ஆல்யாவை காதலித்து வந்தார். ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் இந்த ஜோடி நட்பாகி, காதலிக்கத் தொடங்கியது. ஆனால், பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர். ஆல்யா தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
பின்பு, மானஸூம் சுபிக்ஷாவும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது இந்த ஜோடியும் பிரிந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து மானஸூடனான புகைப்படங்களை நீக்கிய சுபிக்ஷா, தனது இரண்டாவது திருமணத்தினை உறுதி செய்து புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் அவினாஷ் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
» கான் நடிகர்களை விளாசிய கங்கனா; பரபரப்பு பேச்சு!
» மருமகனை இயக்குகிறார் நடிகர் அர்ஜூன்: இந்தப் படத்தின் இரண்டாம் பாகமா?