இயக்குநர் அட்லியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் பாலிவுட்டில் தடம் பதிக்க இருக்கிறார்.
’ராஜா ராணி’, ‘தெறி’, ‘பிகில்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் ரூ. 1000 கோடிக்கு அதிக வசூலைப் பெற்றது. இதனை அடுத்து மீண்டும் பாலிவுட்டில் படம் இயக்க இருக்கிறார் அட்லி.
இவரைத் தொடர்ந்து பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் களமிறங்குகிறார். தற்போது லோகேஷ், ரஜினியை வைத்து ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்திலோ பாலிவுட் படம் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. கதாநாயகனாக அமீர்கான் நடிக்க இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியத் தகவல்.
ஏனெனில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்தீப் ரெட்டி வங்கா, நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குநர்களுக்கு படம் இயக்கத் தெரியவில்லை. வன்முறையை மட்டுமே நம்பி படம் எடுக்கிறார்கள் என்ற விமர்சனத்தை அமீர்கான் வைத்திருந்தார். அப்படி இருக்கும்போது லோகேஷ் இயக்கத்தில் அமீர்கான் நடிக்கிறார் என்பது ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுபற்றி விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
» ‘கங்குவா’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா? ரஜினியின் ‘வேட்டையன்’ அக்.10-ல் வெளியாகிறது!
» 'பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகைக்கு வளைகாப்பு: நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!