யோகிபாபு வீட்டு விசேஷத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலின்... வைரல் புகைப்படங்கள்!

By காமதேனு

யோகிபாபு வீட்டு விசேஷத்துக்கு உதயநிதி வந்துள்ளப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யோகிபாபுவின் இரண்டாவது குழந்தை பரணி கார்த்திகாவின் முதல் பிறந்தநாள் விழாவுக்கு உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் தன் திறமையை நிரூபித்து வரும் யோகிபாபு தனது மகளின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். எளிமையாக நடந்த இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய் டிவி பிரபலங்கள் பாலா, தாம்சன், தங்கதுரை உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகர் யோகிபாபு...

இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்கள் வாழ்த்துகளை சொல்லி இருக்க ரசிகர்களும் யோகிபாபுவின் குழந்தைக்குத் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE