நாக சைதன்யாவுக்கு சைலண்டாக பதிலடி கொடுத்த சமந்தா?!

By KU BUREAU

நடிகை சமந்தா, நாக சைதன்யாவுக்கு சைலண்டாக பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் கடந்த 2021ல் விவாகரத்து நடந்தது. அதன்பிறகு, ஷோபிதாவுடன் அடிக்கடி டேட்டிங் சர்ச்சையில் நாக சைதன்யா சிக்கிய நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி பரவியது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 8ஆம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமண தேதியையும் அறிவிக்க இருக்கிறார்கள். இதனால், வருத்தமடைந்த ரசிகர்கள், சமந்தாவுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பல்வேறு பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதைப் பார்க்க முடிந்தது.

இதற்கெல்லாம் பதிலளிக்காமல் அமைதியாக தன் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, தற்போது இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக புகைப்படம் ஒன்றைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் தான் அணிந்திருக்கும் டி-ஷர்ட்டில் ‘அமைதியின் மியூசியம்’ என்ற வாசகம் எழுதி இருக்கையில், தனது நடுவிரலை நெற்றி அருகில் வைத்திருக்கிறார் சமந்தா. இந்தப் புகைப்படத்தை வைரலாக்கிய ரசிகர்கள், நாகசைதன்யாவுக்கு சைலண்டாக சமந்தா பதிலடி கொடுத்திருக்கிறார் எனக் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE