தவெக கட்சி கொடிக்கு வாகை மலரை தேர்ந்தெடுத்த விஜய்: எப்போது அறிமுகம் தெரியுமா?

By KU BUREAU

நடிகர் விஜய் தனது கட்சிக் கொடிக்கு வாகை மலரைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முழுக்கவே அரசியலில் களமிறங்க தயாராகி வருகிறார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்தத் தீவிரம் காட்டி வரும் விஜய், வரும் ஆகஸ்ட் 22 அன்று தனது கட்சி கொடியை அறிமுகம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் ஆலோசனையின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்காக மூன்று விதமான கொடிகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மூன்று கொடிகளில் ஒன்றின் நடுவே வாகை மலர் இருப்பதைப் போல வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், வாகை மலரை டிக் செய்திருக்கிறார் விஜய்.

பண்டைய தமிழர்கள், போரில் வெற்றிப் பெறும் மன்னர்களுக்கு வாகை மலர் சூடி வரவேற்பார்கள். வெற்றியின் அடையாளமாக வாகை மலர் பார்க்கப்படுகிறது. விஜய் என்றால் வெற்றி என்று அர்த்தம். அதே போல, அவரின் கட்சிப் பெயரிலும் வெற்றி இருக்கிறது. எனவே, மேலும் கீழும் வண்ணம் மற்றும் நடுவில் வாகை மலர் இருக்கும் கட்சி கொடியை விஜய் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE