யாரிவர்? இணையத்தை தெறிக்க விடும் ‘ரஜினிகாந்த்’ நகல்!

By காமதேனு

ரஜினிகாந்தின் இயல்பான தோற்றத்தில் தென்படும் ஒருவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 72 வயதாகிறது. ஆனபோதும் அதே ஸ்டைல், துடிப்பு, நடிப்பு என அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வரை ரசிகர்களை வசீகரித்து வருகிறார். வயது, உடல்நிலை எதையும் பொருட்படுத்தாது கதைக்கும், காட்சிக்கும் தேவையானதை தன்னால் முடிந்தளவுக்கு பங்களித்து வருகிறார்.

இயல்பான தோற்றத்தில் ரஜினி

திரையில் விக் வைத்து பழைய சூப்பர் ஸ்டாருக்கான தோற்றத்தை ரஜினி பராமரித்தாலும், நேரிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இயல்பான தோற்றத்திலேயே வலம் வருகிறார். மேக்கப் இன்றியும், எளிமையான உடுப்புகளோடும், சாயம் பூசாத தாடியுமாக அவரது இந்த பந்தா இல்லாத தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

ரஜினியின் ரசிகர்களில் மத்திம வயதை கடந்தவர்கள் ஏராளம். அம்மாதிரியானவர்கள், ரஜினி போலவே கேசத்தில் சாயம் பூசாது, எளிமையான தோற்றத்தில் வலம் வருகின்றனர். அப்படி ஒருவரது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அச்சு அசலாக ரஜினிகாந்த் தோற்றத்தில் தென்படும் அந்த நபர், ரஜினியைவிட சற்று உருவிவிட்ட உடல்வாகும், சாயம் பூசாத தாடியும், அதே போன்ற கண்ணாடியுமாக தென்படுகிறார். போதாக்குறையாக ரஜினி போலவே அவ்வப்போது தலையில் மிச்சமிருக்கும் கேசத்தை கோதிவிட்டுகொள்கிறார்.

சட்டையும், கால்சராயும், சாதாரண காலணியும் அணிந்து சாலையோரம் தென்படும் அவரை கண்ணுற்றவர்கள், ரஜினியா இவர் என்று திரும்பி பார்த்தபடியே செல்கின்றனர். என்று, எங்கே எடுக்கப்பட்ட வீடியோ என்ற தகவல் அதில் இல்லை. பவுன்சர்கள் சிலர் அந்த ஜெராக்ஸ் ரஜினியை விசாரிப்பதும், கைகுலுக்குவதுமாக செய்கின்றனர். ரஜினியின் வசீகர ஆகிருதிக்கு என்றைக்கும் எண்ட் கார்டே இல்லை என்பதை இந்த வைரல் வீடியோ சுட்டிக்காட்டுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE