நடிகர் விஜயைப் பார்க்க ஜப்பானில் இருந்து கிளம்பி வந்த தங்கைகள்!

By KU BUREAU

நடிகர் விஜயை நேரில் சந்திப்பதற்காக ஜப்பானில் இருந்து சென்னை வந்திருந்த ரசிகைகளின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளத்திலும் அதிகளவில் ரசிகைகள் உள்ளனர். இதைத்தாண்டி அமெரிக்கா, லண்டன் போன்ற பகுதிகளிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை ‘கில்லி’ படத்தின் ரீ-ரிலீஸ் மீண்டும் நிரூபித்தது. தற்போது ரஜினியைப் போலவே நடிகர் விஜய்க்கு ஜப்பானிலும் நிறைய ரசிகைகள் இருக்கின்றனர் என்பது நிரூபணமாகி இருக்கிறது.

ஜப்பானில் இருந்து நடிகர் விஜயை நேரில் சந்திப்பதற்காக சென்னைக்கு வந்திருந்த ரசிகைகள், விஜய் வீட்டிற்கு நேரில் சென்றிருந்த போது விஜய் வீட்டில் இல்லை என்று சொல்லப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.

விஜய்யைப் பார்க்க ஜப்பானில் இருந்து ரசிகைகள் கிளம்பி வந்திருக்கும் தகவலறிந்து, ஜப்பான் ரசிகைகளை தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்று சால்வை அணிவித்து மரியாதை செய்திருக்கிறார் தவெக கட்சியின் பிரமுகர் சரவணன். சரவணன் அலுவலகத்தில் இருந்த விஜயின் புகைப்படங்களைப் பார்த்த ரசிகைகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விஜயின் ‘அண்ணன் நான் வரவா...’ பாடலுக்கும் நடனம் ஆடி மகிழ்ந்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE