’ ‘எனக்கே கிடைச்சது போல இருக்கு’: நித்யா மேனனுக்கு நடிகர் தனுஷ் பாராட்டு!

By KU BUREAU

நடிகை நித்யா மேனனுக்கு தேசிய விருது கிடைத்ததற்காக நடிகர் தனுஷ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ‘’திருச்சிற்றம்பலம்’ படக்குழுவுக்கு வாழ்த்துகள்! ஷோபனாவாக நடித்த நித்யா மேனனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது எனக்கு கிடைத்தது போல மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷுக்கும் எனது வாழ்த்துகள். எங்கள் படக்குழுவுக்கே இது சிறந்த நாள்’ என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல, ‘பொன்னியின் செல்வன்1’ படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கும், மற்ற தேசிய விருது வெற்றியாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார் தனுஷ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE