தேசிய விருதில் மிஸ்ஸான படங்கள்: ரசிகர்கள் ஏமாற்றம்!

By KU BUREAU

தேசிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சில படங்களுக்கு விருதுகள் கிடைக்காமல் போனது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

இன்று மதியம் 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் ‘பொன்னியின் செல்வன்1’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படம், பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் மொத்தமாக 4 தேசிய விருதுகளை வென்றது. அதேபோல, ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதேபடத்தில் ‘மேகம் கருக்காதா...’ பாடலுக்காக ஜானி மற்றும் சதீஷ் சிறந்த நடன வடிவமைப்பாளர்களுக்கான விருதினை வென்றார்கள். இதுமட்டுமல்லாது, ‘காந்தாரா’, ‘கே.ஜி.எஃப்2’ படங்களும் விருது வென்றது.

இதில் கடந்த 2022ல் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘கார்கி’ மற்றும் ‘விக்ரம்’ படத்திற்கும் விருதுகள் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். சிறந்த நடிகைக்கான விருதை சாய் பல்லவியும், சிறந்த துணை நடிகருக்கான விருது மறைந்த நடிகர் ஆர்.எஸ். சிவாஜிக்கும் கிடைக்கும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர்.

அதேபோல, ‘விக்ரம்’ படத்தில் சிறந்த ஆக்‌ஷன் கொரியோகிராஃபிக்காக அன்பறிவுக்கு தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்களிடையே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு ‘கே.ஜி.எஃப்.2’ படத்திற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற நல்ல படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது வருத்தம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE