'தங்கலான்’ கெட்டப்பில் படம் பார்க்க வந்த ரசிகர்கள்: திரையரங்கில் பரபரப்பு!

By KU BUREAU

இன்று 'தங்கலான்’ படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், திரையரங்கில் படம் பார்ப்பதற்காக 'தங்கலான்’ படத்தின் ஹீரோ நடிகர் விக்ரம் போலவே உடை அணிந்து வந்திருந்த ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி எல்.ஏ. திரையரங்குக்கு இன்று காலை படம் பார்க்க வந்திருந்த விக்ரம் ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

’தங்கலான்’ படத்தில் நடிகர் விக்ரமின் தோற்றம் மற்றும் உடையைப் போலவே திரையரங்கிற்கு ரசிகர்கள் பலர் வந்திருந்தனர். கையில் கோல் வைத்துக் கொண்டு, கலைந்த தலையும், கசங்கிய வேட்டியுமாக மேலாடை இல்லாமல் வந்திருந்த ரசிகர்களைப் பார்த்து திரையரங்க வளாகம் பரபரப்பானது.

திரையரங்க நிர்வாகத்தினர் அவர்களை படம் பார்க்க அனுமதிக்க மறுத்த நிலையில், இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், விக்ரம் ரசிகர்கள் படம் பார்க்க திரையரங்கினுள் நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE