'லியோ' காலை 7 மணி காட்சியும் கிடையாது... கைவிரித்த தமிழக அரசு!

By காமதேனு

'லியோ' படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டுமென தயாரிப்பாளர் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 7 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், த்ரிஷா நடித்துள்ள 'லியோ' படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தை பார்க்க தயாராக உள்ளனர். இந்த நிலையில் காலை 4 மணிக்கு ரசிகர் காட்சி திரையிட அனுமதிக்கும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு காட்சிகள் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு துவங்க அனுமதி கோரி பட தயாரிப்பு நிறுவனம் அளிக்கும் விண்ணப்பத்தின் மீது நேற்று மாலையே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அரசாணைப்படி 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு ரசிகர் காட்சி திரையிட அனுமதி மறுத்த அரசு, 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 1:30 மணி வரை ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்து அரசு உத்தரவு பிறப்பித்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் முடிவால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE