'தங்கலான்’ படத்துக்கான தடை நீக்கம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

By KU BUREAU

சென்னை: ‘தங்கலான்’ படத்தை வெளியிட கடைசி நேரத்தில் வந்த சிக்கல் நீங்கியுள்ளது. படத்தைத் திட்டமிட்டபடி வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. படம் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரோமோஷன் பணிகளும் தீவிரமாகத் தொடங்கியது. இப்படியான சூழலில்தான், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது வழக்கு வந்தது.

அதாவது, அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடன் வாங்கி இருக்கிறார். இந்த கடனைத் திருப்பி செலுத்தாததால் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ‘தங்கலான்’ மற்றும் ‘கங்குவா’ படங்களை வெளியிடும் முன்பு ரூ. 1 கோடி டெபாசிட் செய்யும்படி உத்தரவு பிறப்பித்தது. அப்படி செய்தால் மட்டுமே படங்கள் திட்டமிட்டபடி வெளியாகும் எனவும் சொல்லியிருந்தது.

நீதிமன்ற உத்தரவு படி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ. 1 கோடி டெபாசிட் செய்திருப்பதால், ’தங்கலான்’ படத்தை வெளியிட அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE