நிர்வாணமாக நடனமாடவும் தயார்: ‘கொட்டுக்காளி’ விழாவில் இயக்குநர் மிஷ்கின் அதிரடி!

By KU BUREAU

வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் இந்த மாதம் 23ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், இன்று சென்னையில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “ ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்த்தேன். இயக்குநர் வினோத்ராஜ் என்னை செருப்பால் அடித்தது போல இந்தப் படம் இருந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகன் நான். அவரது காலில் விழுந்து முத்தமிட தயாராக இருக்கிறேன். அதற்கடுத்து வினோத்தின் காலில் விழத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தை புரோமோட் செய்ய நிர்வாணமாக நடனம் ஆட வேண்டும் என்றாலும் தயார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. ’கொட்டுக்காளி’ படம் அவனுக்கு மற்றுமொரு குழந்தை. விஜய்சேதுபதியை வைத்து ‘டிரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். விஜய்சேதுபதியை அடுத்து சூரியின் நடிப்பைப் பார்த்து மிரண்டு விட்டேன். காமெடியனாக இருந்து அசுர நாயகனாக வளர்ந்து வரும் சூரியைப் பார்க்க பிரம்மிப்பாக உள்ளது.

படத்தில் கதாநாயகி அன்னா பென் ஒன்றரை வார்த்தைத்தான் பேசியிருப்பார். ஆனால், நிச்சயம் அவரது நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும். சத்தமே இல்லாமல் பெரிய அரசியல் கருத்துடன் ‘கொட்டுக்காளி’ உருவாகி இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE