பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்து, காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். காதல் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர், உதகையைச் சேர்ந்த சாய் பல்லவி. நடனத்தில் பெரும் விருப்பம் கொண்டிருந்த அவர், ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ உள்ளிட்ட நடன ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். பிரேமம் படத்தில் இவரின் மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து, தமிழில் மாரி2, கார்க்கி, உள்ளிட்ட ஏராளமான படங்களிலும், மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகைகளில் வலம் வருகிறார். இவரது தங்கை பூஜா கண்ணனும், ஏ.எல்.விஜய் இயக்கிய ‘சித்திரை செவ்வானம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே படத்துடன் அவர் விலகிக்கொண்டார்.
இந்நிலையில், இவர் காதலில் விழுந்து விட்டதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகி வந்தது. சாய்பல்லவிக்கு முன்னதாகவே அவருக்கு திருமணம் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனை பூஜா, சாய் பல்லவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆமோதிக்கவோ, மறுக்கவோ இல்லை. இந்நிலையில், தான் காதலில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வினீத் என்பவருடன் காதலில் இருப்பதை இன்ஸ்டா பதிவு மூலம் உறுதி செய்துள்ள பூஜா, “இதுவரை கிரைம் பார்ட்னராக இருந்த வினீத் விரைவில் லைஃப் பார்டனராக மாற உள்ளார்” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் ரசிகர்கள், திருமண தேதி எப்போது எனவும் கேட்டு பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
புகழ் குன்றா பொன்மனச் செம்மல் |எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்!
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்!
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டர் பக்கம் முடக்கம்!
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
கலித்தொகையில் இருக்கிறது ஜல்லிக்கட்டு... அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!