தொடங்கியது பிக் பாஸ் 8: முதல் புரோமோ வெளியானது!

By KU BUREAU

பிக் பாஸ் தெலுங்கின் எட்டாவது சீசனுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி இந்தியாவிலும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இது ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் எட்டாவது சீசன் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. வழக்கம் போலவே, இந்த சீசனையும் அங்கு நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்குகிறார். கடந்த ஏழாவது சீசனில், பொதுமக்களில் ஒருவராகக் கலந்து கொண்ட பல்லவி பிரஷாந்த் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். சீரியல் நடிகர் அமர்தீப் இரண்டாவது இடம் பெற்றார்.

இப்போது எட்டாவது சீசன் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் நடிகர் நாகர்ஜூனா பல பெண்களுக்கு மத்தியில் நடனம் ஆடிக் கொண்டே வருகிறார். இதில் கலந்துக் கொள்ளப் போகும் போட்டியாளர்கள் பட்டியல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. நடிகர்கள் சனா, ரிது செளத்ரி உள்ளிட்டப் பலரது பெயர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பவர்களின் பெயர் பட்டியலில் அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE