பிக் பாஸ்7 முடிவில் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்!

By காமதேனு

பிக் பாஸ் சீசன் 7 முடிந்ததும் போட்டியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் சர்ப்ரைஸ் விருந்து கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் விஜே அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளார். மணி சந்திரா இரண்டாவது இடத்தையும் மாயா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். வைல்ட் கார்டில் போட்டியாளராக நுழைந்து பட்டம் வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை அர்ச்சனா பெற்றுள்ளார். இவருக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு தொகை கிடைத்துள்ளது. மேலும் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான ஃப்ளாட் ஒன்றும், காரும் கொடுக்கப்பட்டது. நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் மேடையிலேயே தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தான அப்டேட்டையும் கமல்ஹாசன் கொடுத்தார்.

இதன் பிறகு போட்டியாளர்களுக்கும் விஜய் டிவியில் முக்கியமானவர்களுக்கும் மாஸான விருந்து கொடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். தம் பிரியாணி, சிக்கன் குருமா என அசைவத்திலும் இன்னொரு பக்கம் சாதம், முருங்கைக்காய் சாம்பார் என சைவத்திலும் மெனு கொடுத்து அசத்தியுள்ளார் கமல். இந்தப் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS