கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்: நடிகர்கள் ரஜினி, கமலுக்கு அழைப்பு!

By KU BUREAU

முன்னாள் முதலைமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கலைஞரின் நூற்றாண்டு நினைவு நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதற்கான விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சிறப்பு நாணயத்தை வெளியிட இருக்கிறார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களோடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE