’லியோ’ படத்தில் நடிகர் விஜய் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான வார்த்தைகள் பேசியது குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் விளாசியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதனை, ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடினாலும் மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. அதாவது, ’விஜய் போன்ற ஒரு பெரிய ஹீரோ பொறுப்பே இல்லாமல் ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறார். இவரா தமிழ்நாட்டை ஆள ஆசைப்படுகிறார்’ என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் பட விழா ஒன்றில் பேசுகையில், "ஒருகாலத்தில் சினிமா நாகரிகத்துக்காக, சமூகத்துக்காக படம் எடுத்தார்கள். ஆனால், இப்போது நிலைமையே வேறு. கேடு கெட்டவனிலும் கேவலமானவன்தான் கெட்டவார்த்தை பேசுவான். சில வார்த்தைகள் இப்போதெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. ஆனால், அதெல்லாம் சினிமாவில் மீண்டும் வருகிறது.
அதை பெரிய ஹீரோ சொல்லும்போது அது மக்களுக்கு எளிதாக போய் சேரும். இளைஞர்கள் நம்பிக்கொண்டிருக்கிற அதுவும் தலைவனாக வரப்போகிறவர் என்று நினைக்கும் ஒருவர் இப்படி பேசலாமா? இதெல்லாம் நடைமுறையில் பேசுவதுதானே என்று சிலர் சொல்கிறார்கள்.எத்தனை பேர் நடைமுறையில் இப்படி பேசுகிறார்கள்?
ஏதோ நான்கு பேர் பேசுவதை நான்கு கோடி மக்கள் கேட்கும்படி சொல்ல வேண்டுமா? கோடி கோடியாக சம்பளம் வாங்கிக் கொண்டு கெட்ட வார்த்தையை பேசலாமா? அது இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலை கொடுக்காதா?" என நடிகர் விஜயை மறைமுகமாக கே.ராஜன் விளாசியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!
பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை
க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!
மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது