சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசரம் இல்லை. படம் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என கமர்ஷியல் மசாலாக்களை வலுக்கட்டாயமாகத் திணித்ததில்லை. பெரிய ஹீரோக்கள்தான் வேண்டும், பட்ஜெட் பிரம்மாண்டமாக வேண்டும் என்ற அலட்டல் இல்லை.
எளிமையான கதை, வலுவான காட்சிகள், கூர்தீட்டிய வசனங்கள் என தன்னுடைய படங்களின் மூலம் எளிய மக்களின் அன்பை ரெளத்திரமாக திரையில் வடித்ததன் மூலம் கவனம் ஈர்த்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ராமின் 49வது பிறந்தநாள் இன்று. அவர் பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
* இலக்கிய ஆர்வம் அதிகமுள்ள ராம் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக சேர்ந்திருந்தார். பாலுமகேந்திரா பிறரின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்ததை நிறுத்தி இருந்த சமயம் அது. அவரிடம் தான் இயக்க இருந்த ’மேகம்’ என்ற குறும்படத்தின் கதையைச் சொல்லி ஒளிப்பதிவு செய்ய ஒத்துக் கொள்ள வைத்தார் ராம்.
* ’கற்றது தமிழ்’ என்ற தனது முதல் படத்திலேயே, தான் இப்படித்தான் என அழுத்தமாக நிரூபித்தார் ராம். அஞ்சலி, ஜீவா என இவர்களின் நடிப்புத் திறமை வேறொரு பரிணாமத்தில் வெளிப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் ‘Touch Me Here If you Dare’ என்று வாசகம் எழுதிய டி-ஷர்ட் அணிந்த பெண்ணின் மார்பகத்தை ஹீரோ தொடுவது போன்ற காட்சி சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்தான கேள்விக்கு பதில் அளித்தபோது, ‘நாம் விலங்குகளுக்கு ஒப்பானவர்கள்தான். ஆனால் சில விதிகளுக்கு உட்பட்டு நம்மை நாம் மறைத்து வைத்திருக்கிறோம். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் பெரிய மார்பகம் இருக்கும் பெண்ணை பார்க்காமல் இருப்பவர் யார். அதனால் அவன் களங்கமானவன் கிடையாது’ என பதிலளித்திருந்தார்.
* திரைத்துறைக்கு வந்து 15 வருடங்கள் கடந்திருந்தாலும் அவர் ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு‘ என்ற நான்கு படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார்.
* ராமின் திரைப்படங்களில் பாடல்களும் இசையும் கதையோட்டத்தில் கலந்திருக்கும். இதற்கு பெரும்பலமாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் நா.முத்துகுமாரின் பாடல் வரிகளும் அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
* தனது இரண்டாவது படத்திலேயே மூன்று தேசிய விருதுகளை வென்ற இயக்குநர் ராம், நடிகராகவும் ’தங்கமீன்கள்’, ‘சவரக்கத்தி’, ‘சைக்கோ’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
* தான் இயக்கிய நான்கு படங்களிலும் கதைக்கு யார் பொருத்தமோ அந்த நடிகர்களைத்தான் தேர்ந்தெடுத்து இருப்பார். அவர் இணைந்து பணியாற்றிய பெரிய நடிகர் என்றால் ‘பேரன்பு’ படத்தில் மம்முட்டிதான். அவருடன் பணியாற்றியது இயக்குநர் பாலுமகேந்திராவை நினைவுப்படுத்தியது என்பார்.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!