40 நகரங்களில் நடக்கிறது: விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 ஆடிஷன்

By KU BUREAU

விஜய் டிவியில், சூப்பர் சிங்கர் ஜூனியர் 10-வது சீசனுக்கான ஆடிஷன், 40 நகரங்களில் நடக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி இதுவரை 19 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன.

சீனியர், ஜூனியர்களுக்கு தனித்தனி சீசன்களாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சமீபத்தில் பெரியவர்களுக்கான 10-வது சீசன் முடிவடைந்தது. இதையடுத்து ஜூனியர்களுக்கான 10-வது சீசனின் முதல்கட்ட நேர்முகத் தேர்வு (ஆடிஷன்) புதுக்கோட்டையில், வரும் 12-ம் தேதி நடக்கிறது.

தொடர்ந்து 40 நகரங்களில் இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. திருச்சி,மதுரை, கோவை, மற்றும் சென்னையில் இதன் அடுத்தக் கட்ட தேர்வுகள் நடைபெறும்.

இதில் 6 வயது முதல் 15 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் விஜய் டிவிமற்றும் அதன் சோஷியல் மீடியா தளங்களில் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளின் அடிப்படையில் தேர்வுகள் நடக்கும் இடங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE