திரைத்துறையில் தன்னை வளர்த்துவிட்டவர்களை வடிவேலு மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விஷயம் அவரது ரசிகர்களையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.
நகைச்சுவை நடிப்புக்காக பெயர் போனவர் நடிகர் வடிவேலு. முன்னணி நகைச்சுவைக் கலைஞராக வலம் வந்த இவர் தனது பிடிவாத குணம் காரணமாக படப்பிடிப்புத் தளத்தில் பல பிரச்சினைகளைச் செய்தார்.
குறிப்பாக, இவருக்கும் இயக்குநருக்கும் வந்த பிரச்சினை காரணமாக இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு சில வருடங்கள் நடிப்புத் துறையிலேயே தலைகாட்டாமல் இருந்தார். அதன் பின்னர், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூலமாக திரும்ப நடிக்க வந்தார். ஆனால், அந்தப் படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. அடுத்ததாக, உதயநிதியுடன் ‘மாமன்னன்’ படத்தில் குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு வரவேற்பைப் பெற்றது. இப்படி நடிகனாக அவர் பெயர் பெற்றாலும், திரைத்துறையில் ஆரம்ப காலத்தில் தன்னை வளர்த்து விட்டவர்களை அவர் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
குறிப்பாக, நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு வடிவேலு அஞ்சலி செலுத்த வராதது கடும் கண்டத்திற்கு உள்ளானது. இந்த நிலையில்தான் ‘கலைஞர் 100’ விழாவில் தன்னை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய ராஜ்கிரணை அவர் மதிக்கவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.
’கலைஞர் 100’ விழா மேடைக்கு நட்சத்திரங்களை அழைத்துச் செல்ல பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் ராஜ்கிரண் வந்த பேட்டரி காரில் ராஜ்கிரணுக்கு அருகே அமரும் சூழல் வடிவேலுவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுப்பான வடிவேலு, அந்தக் காரில் இருந்து இறங்கி வேறு காருக்கு மாறி இருக்கிறார். மேலும், ராஜ்கிரணை வடிவேலு ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை என சொல்லப்படுகிறது.
வடிவேலு திரைத்துறையில் இத்தனை புகழ் உச்சிக்கு வந்ததற்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் ராஜ்கிரண். அவரையே வடிவேலு மதிக்காமல் உதாசீனப்படுத்தி இருப்பது வடிவேலு ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... எழும்பூரில் திடீரென தடம் புரண்ட ரயில் எஞ்சின்!
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள்... 100க்கும் மேற்பட்டோர் கைது!
12 அடி உயரம்... 8 அடி அகலம்... அயோத்தி ராமர் கோயிலில் 42 கதவுகள் தங்கத்தில் பொருத்தம்!
உடனே முந்துங்க... நாளை முதல் நெல்லை வரை பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு... முன்பதிவு துவக்கம்!
மயங்கி விழுந்த பேருந்து ஓட்டுநர்... ஓய்வு பெற்ற ஊழியர்கள் தாக்கியதால் பரபரப்பு!