பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் விஜய் அவருக்குத் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அரசியலில் நுழைய ஆயத்தமாகி வரும் நடிகர் விஜய் சமீபகாலமாக அதற்கான செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் பரிசு வழங்கினார். இதுமட்டுமல்லாது, ஏழை மாணவர்களுக்காக இரவு நேர பாடசாலை அமைத்துக் கொடுத்த விஜய், தொடர்ந்து தன் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாக முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு தானே தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளை கூறி வருகிறார். அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கு அவரை தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார் விஜய்.
இப்போது, இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸுக்கு நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ’லியோ’ படத்தில் நடிகர் விஜய்யின் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டருக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!
புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!