பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

By காமதேனு

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு எழுத்தாளர் பவா செல்லதுரை வெளியேறியதாக புகைப்படம் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன்

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனின் முதல் நபராக மாடல் அனன்யா வெளியேற்றப்பட்டிருக்கிறார். இந்த வாரத்தின் கேப்டனாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அனன்யாவை வெளியேற்றும் முன்பு கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களிடமும் யார் வெளியே செல்வார் என்பதை யூகத்தின் அடிப்படையில் சொல்லச் சொன்னார். இதில் பெரும்பாலானோர் கதைசொல்லியான எழுத்தாளர் பவா செல்லதுரை பெயரை தான் சொன்னார்கள். ஆனால், மக்கள் ஓட்டுகளின் அடிப்படையில் அனன்யா வெளியேற்றப்படுவதாக அறிவித்தார் கமல்.

பிக் பாஸ் அனன்யா

இந்த நிலையில்,எழுத்தாளர் பவா செல்லதுரை திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீசனில் அவர் சொல்லிய ஒருசில கதைகள் போட்டியாளர்கள் மத்தியிலும் வெளியே பார்வையாளர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் பல எபிசோட்கள் பவா இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

பவா செல்லதுரை

ஆனால், அவர் ஒரே வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி உள்ளது ரசிகர்களுக்கு அதிர்சியாக உள்ளது. ,“சூழ்ச்சிகள், சதிகள் எல்லாம் இருக்கும் எனத் தெரிந்துதான் வந்தேன். ஆனால், இங்கு கூடுதலாக வன்மமும் அதிகம் இருக்கிறது. தொடர்ந்து இங்கு டாஸ்குகளை செய்ய என் உடலும் ஒத்துழைக்காது. எனவே, நான் வெளியேறி விடுகிறேன்” என்ற காரணங்களைச் சொல்லி பவா செல்லதுரை வெளியேறி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஒரு தரப்பில் ரசிகர்கள் அவர் முடிவுக்கு வருத்தப்பட்டாலும் இன்னொரு தரப்பினர் அவர் ஒரு நாள் முன்னதாக இந்த முடிவை எடுத்திருந்தால், நேற்று அனன்யா எலிமினேட்டாகி இருக்க மாட்டார் என்றும் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE