அடுத்தடுத்து சிக்கலில் ‘லியோ’ - தயாரிப்பாளரிடம் எகிறிய விஜய்!

By காமதேனு

’லியோ’ படத்தில் நடனக் கலைஞர்கள் கொடுத்துள்ள புகாரால் பரபரப்பு எழுந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘லியோ’. இதன் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள அதீத வன்முறைக் காட்சிகள், விஜய் பேசும் கெட்ட வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தைப் பெற்றது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தில் வேலைபார்த்த நடனக் கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று, படத்தில் பணிபுரிந்த நடனக் கலைஞர் ரியாஸ் அகமது புகார் தெரிவித்துள்ளார்.

வீடியோ வெளியிட்டு அவர் பேசியிருப்பதாவது, “லியோ படத்தில் ‘நான் ரெடிதான்...’ பாடலில் நடனமாடிய 1300 கலைஞர்களில் நானும் ஒருவன். அதற்கான ஐடி கார்ட் என்னிடம் உள்ளது. நாங்கள் போய் வந்து நான்கு மாதங்கள் ஆகிறது. ஆனால், அதற்கான பேமெண்ட் இன்னும் வரவில்லை. அதைப் பற்றிக் கேட்டாலும் எங்களுக்கு எந்த ரெஸ்பான்ஸ் வரவில்லை. இது குறித்து ‘லியோ’ டீம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏற்கெனவே இசை வெளியீடு நிகழ்ச்சி ரத்து, ட்ரெய்லர் வசனத்துக்கு எதிர்ப்பு என்று அப்செட்டில் இருக்கும் விஜய் கவனத்துக்கு இந்த செய்தி ஏற்கெனவே சென்று சேர்ந்ததும், ‘பிரச்சினையைப் பெரிதாக்காமல் பஞாயத்துக்கு வர்றதுக்குள்ள செட்டில் பண்ணிடுங்க’ என்று தயாரிப்பாளரிடம் கூறியதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், நடன கலைஞர்கள் இதுநாள் வரை பொறுமையாக காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இது வரை எந்த ரெஸ்பான்ஸும் இல்லாததால், இப்போது ஒவ்வொருத்தராக, பட ரிலீஸுக்கு முன்பாக எப்படியாவது தங்களுக்கான சம்பளத்தை வாங்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்களாம். இருக்கிற பிரச்சினையில புதுசா இன்னொரு பிரச்சினையை உருவாக்காதீங்க... படத்தை சுமூகமா ரிலீஸ் பண்ற வழியைப் பாருங்க என்று தயாரிப்பாளரிடம் விஜய் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE