பிக் பாஸ்7: முதல் வாரத்தில் எலிமினேட் ஆனது இவரா? - ரசிகர்கள் அதிர்ச்சி

By காமதேனு

பிக் பாஸ் முதல் வாரத்தில் எலிமினேட் ஆனவர் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசன் தொடங்கி ஒரு வாரம் ஆகியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையில் சண்டை சச்சரவுகளை தொடங்கினார். இந்த வார கேப்டனான விஜய் வர்மாவுக்கு பிடிக்காதப் போட்டியாளர்கள் இன்னொரு பிக் பாஸ் இல்லத்திற்குள் அடைக்கப்பட்டதில் இருந்து பிரச்சினைகள் ஆரம்பமாகியது. இரண்டு வீடு என்பதால் இரண்டு நாமினேஷனும் இருந்தது. அந்த வகையில், முதல் வார நாமினேஷனில் யுகேந்திரன், பிரதீப், ரவீனா, ஐஷூ, அனன்யா, பவா செல்லதுரை மற்றும் ஜோவிகா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

பிக் பாஸ் அனன்யா

முதல் வாரத்தில் பொதுவாக நாமினேஷன் இருக்குமே தவிர எலிமினேஷன் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், இந்த சீசனில் எலிமினேஷன் முதல் வாரத்தில் தொடங்கியுள்ளது. அதன்படி பிக் பாஸ் ஏழாவது சீசனில் இருந்து முதல் போட்டியாளராக அனன்யா வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் இல்லத்திற்குள் வயதில் மூத்தவர்களான பவா செல்லதுரை, விசித்திரா வெளியேறுவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் மாடல் அனன்யா வெளியேறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE