ரூ.5 கோடிக்கு உத்தரவாதம் செலுத்தணும்... நடிகை மகாலட்சுமியின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன்

By காமதேனு

பணமோசடி வழக்கில் சமீபத்தில் கைதான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ரவீந்தர் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் இருந்து கடந்த 2021ம் ஆண்டு ரூ.16 கோடி வாங்கி ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதுதவிர, மேலும் இருவரிடம் ரூ.8 கோடி வாங்கி மோசடி செய்ததாகவும் ரவீந்தர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ரவீந்தர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ரவீந்தரை ஜாமீனில் வெளியே கொண்டுவர அவரது மனைவி மகாலட்சுமி எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ஆனால், இப்போது சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது.

ரவீந்தர்- மகாலட்சுமி...

ரவீந்திரனின் வங்கிக் கணக்கில் இருந்து பல பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், இவை அனைத்தும் இந்த வழக்கு தொடர்புடையதா எனத் தெரியவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இரண்டு வாரங்களில் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என்கிற நிபந்தனையோடு ரவீந்தர் சந்திரசேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!

அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE