விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

By காமதேனு

விசித்ராவுடன் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டில் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ச்சை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் பிரதீப். அந்த வகையில் நேற்று நடந்த டாஸ்க்கில் பெண் போட்டியாளர்கள் தோற்றால், அவர்களின் மேக்கப் பொருட்களை பிக்பாஸிடம் கொடுத்துவிட வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு பிரதீப் சொன்ன கமெண்ட் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேக்கப்பை கலைத்தால் தான் பெண்களின் உண்மை முகம் வெளியவரும், அதனை பார்க்க விரும்புவதாக கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு பெண் போட்டியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுமட்டுமல்லாது ஆணும், பெண்ணும் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என்று பிக்பாஸ் தண்டனை கொடுக்க வேண்டும் என பிரதீப் கூறினார். இதைக் கேட்டு ஷாக்கான விசித்ரா பிக்பாஸிடம், ’இவர் மட்டும் தைரியமா என்கூட படுத்து தூங்கிட்டா, என் பெயரை மாத்திக்கிறேன்’ எனக் கோபமாக பேசியுள்ளார்.

உடனே பிரதீப், ’நான் பெட்ல படுத்து தூங்கனும்னு சொல்லல, உங்க பக்கத்துல படுத்து தூங்கனும்னு தான் சொன்னேன்’ எனக் கூறினார். பிரதீப்பின் இந்தப் பேச்சுக்கு ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததோடு இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!

அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE