நயன் வழியில் நடிகர் அஜித்... புதிய தொழில் தொடங்கினார்!

By காமதேனு

நயன்தாராவை போல நடிகர் அஜித் புதிய தொழிலைத் தொடங்கியதுடன் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்று தனது நிறுவனத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார்.

நடிகர் அஜித்

சூப்பர் பைக்குகளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகர் அஜித், அது தொடர்பான தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது புதிய நிறுவனத்திற்கு வீனஸ் மோட்டர் சைக்கிள் டூர்ஸ் எனப் பெயரிட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் மூலம் உலகச் சுற்றுலா செல்ல அறியப்படாத இடங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் தற்போது புதிதாக ஸ்கின்கேர் காஸ்மெடிக்ஸ் தொழிலில் இறங்கியுள்ளார். அவர் பெயரிலேயே இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் அஜித்தும் புதிய தொழில் தொடங்கியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE